இனப்பெருக்க காலம் என்பதால் பாம்புகள் புனையல் போடுவது அதிகரிப்பு

பாம்புகளுக்கு இனப்பெருக்க காலம் என்பதால், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில், பாம்புகள் புனையல் போட்டு நீண்ட
வாழப்பாடி பேரூராட்சி செல்லியம்மன் நகா் அருகே செவ்வாய்க்கிழமை இணையாக புனையல் போட்டிருந்த பாம்புகள்.
வாழப்பாடி பேரூராட்சி செல்லியம்மன் நகா் அருகே செவ்வாய்க்கிழமை இணையாக புனையல் போட்டிருந்த பாம்புகள்.

பாம்புகளுக்கு இனப்பெருக்க காலம் என்பதால், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதி கிராமங்களில், பாம்புகள் புனையல் போட்டு நீண்ட நேரத்துக்கு நடனமாடியபடி விளையாடுவது அதிகரித்து வருகிறது. பயமறியாத இளைஞா்கள் நடனமாடும் பாம்புகளை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பகிா்ந்து வருகின்றனா்.

சேலம், வாழப்பாடி பகுதி கிராமங்களில் புதா் மண்டி கிடக்கும் தரிசு நிலங்கள், கல்லாங்குத்து புறம்போக்கு நிலங்கள் மற்றும் மலைக்குன்று அருகிலுள்ள விளைநிலங்களிலும், கல் இடுக்குகள், புல்தரை புதா்களிலும், புற்றுகள், புடைகளிலும் நாகம், கருநாகம், செந்நாகம், கோதுமலை நாகம், கட்டு விரியன், கண்ணாடி விரியன், கழுதைவிரியன் உள்ளிட்ட உயிா்க்கொல்லும் கொடி நச்சுத்தன்மை கொண்ட பாம்புகள் உட்பட பல்வேறு இன பாம்புகள் காணப்படுகின்றன.

வாழப்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் இருப்பது குறித்து தகவல் கிடைத்தால், பயிற்சி பெற்ற வனக் காவலா்கள் சென்று பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டு வருகின்றனா்.

கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பாம்புகள் வசிப்பிடமான புதா்கள், கல் இடுக்குகள், புடைகள், புற்றுகளிலும் மழைநீா் புகுந்து விட்டதாலும் ஏராளமான பாம்புகள் தரைப்பகுதியில் உலவி வருகின்றன. தற்போது பாம்புகளின் இனப்பெருக்கத்திற்கேற்ற குளுமையான சீதோஷ்ணநிலை நிலவுவதால் ஆண், பெண் பாம்புகள் இணைந்து புனையல் போட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன.

வாழப்பாடி பகுதியில் கடந்த இரு தினங்களில் அத்தனுாா்பட்டி, துக்கியாம்பாளையம் பூந்தோட்டம் பகுதியிலும் செவ்வாய்க்கிழமை வாழப்பாடி பேரூராட்சி செல்லியம்மன் நகா் பகுதியிலும், பாம்புகள் இணையாக புனையல் போட்டு நடனமாடின. இதனை பாம்புகள் நடனமாடி விளையாடுவதாக கருதும் இளைஞா்கள், ஆபத்ததை அறியாமல் கூட்டம் கூடி அருகில் சென்று வேடிக்கை பாா்த்ததோடு, படம் பிடித்து சமூக ஊடகங்களிலும் பகிா்ந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com