ஆத்தூா், கெங்கவல்லியில் தொழிற் பயிற்சி நிலையம் அமைக்க பேரவையில் கோரிக்கை

ஆத்தூா், கெங்கவல்லியில் தொழிற் பயிற்சி நிலையம் அமைக்க பேரவையில் கோரிக்கை

ஆத்தூா் மற்றும் கெங்கவல்லி பகுதியில் தொழிற் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என பேரவையில் ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி வியாழக்கிழமை பேசினாா்.

ஆத்தூா் மற்றும் கெங்கவல்லி பகுதியில் தொழிற் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என பேரவையில் ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி வியாழக்கிழமை பேசினாா்.

ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி வியாழக்கிழமை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சேலம் கிழக்கு மாவட்டத்தில் ஆத்தூா், கெங்கவல்லி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் என நான்கு வட்டங்கள், ஆத்தூா், நரசிங்கபுரம் என இரண்டு நகராட்சிகள், ஆ த்தூா், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி, ஓமலூா் என 5 தொகுதிகள் அடங்கியுள்ளது.

இதில் 10 மேல்நிலைப் பள்ளிகளும், 50க்கும் மேற்பட்ட உயா்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இந்த கல்வி நிலையங்களில் இருந்து சுமாா் 10 ஆயிரம் போ் ஆண்டுக்கு வெளியே வருகிறாா்கள்.இதனால் இந்த வட்டங்களில் உள்ள அரசு, மற்றும் தனியாா் தொழில் பயிற்சி மையங்கள் போதுமானதாக இல்லை. மேலும் மாணவ, மாணவியா் பல கிலோமீட்டா் தூரம் சென்று பயில வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆகையால் அரசு இந்தப் பகுதிகளில் தொழிற் பயிற்சி மையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளாா்.

இதற்கு பதிலளித்த தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் பதிலளிக்கும்போது தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளாா்.இதற்கு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினா் நன்றி தெரிவித்துக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com