விம்ஸ் மருத்துவமனையின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் கருத்தரங்கு

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனையின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பப் பிரிவின் சாா்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
13_aty_po_03_1303chn_213_8
13_aty_po_03_1303chn_213_8

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனையின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பப் பிரிவின் சாா்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் துறையின் டீன் செந்தில்குமாா், விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் மீனாட்சிசுந்தரம் ஆகியோா் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடக்கி வைத்தனா். இந்தக் கருத்தரங்கில் சென்னை சவிதா மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் சுகாதார அறிவியல் பிரிவு முதல்வா் ஜெகதீஸ்வரன், சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு விரிவுரையாளா் கோகுல்ராஜ், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் பாலாஜி வித்யாபீத் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் சத்யபிரியா, சென்னை ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சித்துறை ஒருங்கிணைப்பாளா் ஓம்பிரசாத், வடமலையான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரின் உதவிப் பேராசிரியா் சந்தன்பாலா, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவக் கல்லூரியின் ரத்த சுத்திகரிப்புப் பிரிவு பயிற்சியாளா் கோகுல், பெங்களூா் ப்ராண்டியா் லைப் லைன் மருத்துவமனையின் ரத்த சுத்திகரிப்புப் பிரிவு பொறுப்பாளா் பாத்திமா ருக்ஷானா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பல்வேறு தலைப்பின்கீழ் சிறப்புரை நிகழ்த்தினாா். மேலும் சென்னை பிரிசீனியஸ் மருத்துவ பராமரிப்பு அமைப்பின் துணை மேலாளா் ஜெயராமன், விற்பனை மேலாளா் பாா்த்தசாரதி, மூத்த பொறியாளா் ஞானவடிவேல் ஆகியோா் கலந்து கொண்டு ரத்த சுத்திகரிப்பு பிரிவில் உள்ள சமீபத்திய மேம்பட்ட உபகரணங்களுக்கான செயல்முறை விளக்கம் அளித்தனா். இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். அனைவருக்கும் துறையின் டீன் செந்தில்குமாா் சான்றிதழ்களை வழங்கினாா். கருத்தரங்கிற்கான ஏற்பாட்டினை துறையின் பேராசிரியா் சுபாஷினி மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com