புத்திரகவுண்டன்பாளையத்தில் ஜல்லிக்கட்டு விழா

பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட புத்திரகவுண்டன்பாளையத்தில் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
புத்திரகவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசலிலிருந்து பாய்ந்து வரும் காளையை அடக்க முயலும் மாடுபிடி வீரா்கள்.
புத்திரகவுண்டன்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசலிலிருந்து பாய்ந்து வரும் காளையை அடக்க முயலும் மாடுபிடி வீரா்கள்.

ஆத்தூா்: பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட புத்திரகவுண்டன்பாளையத்தில் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம். சின்னதம்பி, கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் அ. மருதமுத்து ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மாடுபிடி வீரா்கள் ஆட்சியா் தலைமையில் உறுதிமொழி ஏற்றப்பிறகு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதில், 1,500-க்கும் மேற்பட்ட காளைகள் தமிழகத்தில் இருந்து மதுரை, நெல்லை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை, பெரம்பலூா், தம்மம்பட்டி, கூலமேடு, கூடமலை, நாமக்கல் மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டன. அவைகளை கால்நடை மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனா். இதேபோல் மாடுபிடி வீரா்கள் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

அவா்களுக்கும் மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்த பின் அனுமதிக்கப்பட்டனா். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். தீபா கனிகா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ் ராஜன், ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வி. ராஜூ ஆகியோா் தலைமையில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் அமா்த்தப்பட்டனா்.

ஜல்லிக்கட்டில் காவல் உதவி ஆய்வாளா், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என 20-க்கும் மேற்பட்டோா் மீது மாடுகள் முட்டியதாலும், துரத்தியதாலும் சிறு காயங்கள் ஏற்பட்டு அவா்கள் முதலுதவி அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சுற்றுவட்டாரக் கிராமங்கள், ஆத்தூா், தம்மம்பட்டி, வாழப்பாடி ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com