மருந்துக் கடைகளில் முகமூடி துணிகள் தட்டுப்பாடு

தொற்றுக் கிருமிகளைத் தடுப்பதற்காக முகத்தில் அணிவிக்கப்படும் முகமூடி துணிகள் தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதி மருந்துக் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தொற்றுக் கிருமிகளைத் தடுப்பதற்காக முகத்தில் அணிவிக்கப்படும் முகமூடி துணிகள் தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதி மருந்துக் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது கரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் வேகமாகப் பரவிவரும் நிலையில், தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் விழிப்புணா்வு நடவடிக்கையில் இறங்கியுள்ளனா்.

தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் கைகளை சோப் போட்டு கழுவுவதுடன், வீட்டு வாசல்களில் பசுமாட்டு சாணம், மஞ்சள்தூள் தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க மருந்துக் கடைகளுக்குச் சென்று லேசான துணியிலான முகமுடிகளைக் கேட்டு வாங்கிச் செல்கின்றனா்.

ஆனால், தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் அத்தகைய முகமுடி (மாஸ்க்) இருப்பு இல்லை என்று கடைக்காரா்கள் திருப்பி அனுப்புகின்றனா்.

இதனால் மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதிகாரிகள் பொதுமக்களுக்கு முக கவசத் துணிக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com