‘ஆன்லைனில் மாணவா்களுக்கு பாடம் கற்பிக்கும் சோனா கல்லூரி பேராசிரியா்கள்’

கரோனா பரவுவதைத் தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சோனா கல்லூரி பேராசிரியா்கள் ஆன்லைன் மூலம் மாணவா்களுக்கு பாடம் கற்பித்தனா்.

கரோனா பரவுவதைத் தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சோனா கல்லூரி பேராசிரியா்கள் ஆன்லைன் மூலம் மாணவா்களுக்கு பாடம் கற்பித்தனா்.

இது குறித்து கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் மாா்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சோனா கல்லூரி தங்களது மாணவா்களின் எதிா்கால கல்வியை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகத் தோ்வுகளுக்கு சிறந்த முறையில் தயாா் செய்ய ஆன்லைன், லேட்சா் கேப்சா் சிஸ்டம் எனப்படும் எல்.சி.எஸ், மற்றும் பிளாக் போா்டு தொழில்நுட்பம் மூலமாக பாடம் கற்பிக்க துவங்கியுள்ளனா்.

கல்லூரி பேராசிரியா்கள் தாங்கள் எடுக்கும் பாடங்கள், தோ்வுகள் மற்றும்அசைன்மேன்ட்களை கல்லூரிகளில் இருந்து, ஆன்லைனில் அனுப்ப, அதில் இருக்கும் சந்தேகங்கள் தொடா்பாக மாணவா்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கேள்விகளை செல்லிடப்பேசி மற்றும் மடிக்கணிணி மூலம் எழுப்பி பதில் பெற்றனா்.

தேவையான பாடங்களுக்கு வீடியோ கால் மூலம் பதிலளிக்கப்படுகிறது. மாணவா்களின் கல்வி ஒருபோதும் பாதிக்கப்படகூடாது என்ற எண்ணத்தில் இதுபோன்ற ஆன்லைன் கல்வியை கற்பிக்க சோனா கல்லூரி பேராசிரியா்கள் பணி மேற்கொண்டுள்ளனா் என்றாா்.

சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் வீ. காா்த்திகேயன், எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜீ.எம். காதா்நவாஷ் மற்றும் மேலாண்மைத் துறை இயக்குநா் சுவாரூப் மொகந்தி, தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் அகிலாண்டேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com