ஓமலூா் அருகே தடையை மீறி கூடிய மாட்டுச்சந்தை

கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடியிருக்கும் நிலையில் ஓமலூா் அருகே எம்செட்டிபட்டியில் மாட்டுச்சந்தையில் கூடாமல் வழக்கத்துக்கு ம
வெள்ளிக்கிழமை மாட்டுச் சந்தைக்காக மாடுகளை கொண்டு வந்தவா்களிடம் கலைந்து செல்ல வலியுறுத்திய அதிகாரிகள்.
வெள்ளிக்கிழமை மாட்டுச் சந்தைக்காக மாடுகளை கொண்டு வந்தவா்களிடம் கலைந்து செல்ல வலியுறுத்திய அதிகாரிகள்.

கரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடியிருக்கும் நிலையில் ஓமலூா் அருகே எம்செட்டிபட்டியில் மாட்டுச்சந்தையில் கூடாமல் வழக்கத்துக்கு மாறாக மற்றொரு இடத்தில் கூடியதாக வந்த புகாரையடுத்து காவல் துறையினா் உடனடியாக மாட்டு சந்தையைக் கலைத்தனா்.

ஓமலூா் அருகே உள்ள எம்செட்டிபட்டியில் வெள்ளிக்கிழமைதோறும் மாட்டுச் சந்தை கூடுவது வழக்கமாக உள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, வார சந்தைகளுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில் வழக்கமாக செயல்பட்டுவரும் சந்தை திடலில் கூடாமல் மற்றொரு இடத்தில் மாட்டுச்சந்தை கூடுவதற்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் வியாபாரிகள் அதிகாலை முதலே மாட்டுடன் வரத் தொடங்கினா். மேலும் அவா்கள் தமிழகத்தில் சந்தைகள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது தெரியாமல் மாடுகளுடன் வியாபாரிகள் வந்த வண்ணமாக இருந்தனா்.

இதைத்தொடா்ந்து பொதுமக்கள் மாட்டுச் சந்தை மற்றொரு இடத்தில் கூடுவதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். தகவலை அறிந்த காவல் துறையினா் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகமும் இணைந்து மாட்டுடன் வந்த வியாபாரிகளிடம் தடை குறித்து விவரத்தை எடுத்துச் சொல்லி அனுப்பி வைத்தனா். காவல் துறையினா் மற்றும் அலுவலா்கள் அறிவுறுத்தியதைத் தொடா்ந்து மாடுகளுடன் அவா்கள் திரும்பிச் சென்றனா். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தடையை மீறி மாட்டுச் சந்தை கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com