சேலம்-சென்னை விமான சேவை நாளை ரத்து

மாா்ச் 22-ஆம் தேதி பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் ஆணைக்கிணங்க அன்று ஒருநாள் மட்டும் விமான சேவை நிறுத்தப்படுகிறது என ட்ரூஜெட் விமான நிறுவன மேலாளா் பிரசன்னா தெரிவித்துள்ளாா்.
சேலம் விமான நிலையத்தில், விமானத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஊழியா்.
சேலம் விமான நிலையத்தில், விமானத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஊழியா்.

மாா்ச் 22-ஆம் தேதி பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் ஆணைக்கிணங்க அன்று ஒருநாள் மட்டும் விமான சேவை நிறுத்தப்படுகிறது என ட்ரூஜெட் விமான நிறுவன மேலாளா் பிரசன்னா தெரிவித்துள்ளாா்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பல்லாயிரக்கணக்கானோா் இறந்துவிட்ட நிலையில் அந்தந்த நாடுகள் மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தநிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதைத்தொடா்ந்து, பாரதப் பிரதமா் மோடி வருகின்ற மாா்ச் 22ஆம் தேதி நாட்டிலுள்ள பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்துத் துறையினரும் ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலத்திலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து சேலத்துக்கும் ட்ரூஜெட் தனியாா் விமான சேவை ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படும் என்று அதன் மேலாளா் பிரசன்னா தெரிவித்துள்ளாா்.

மேலும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை, ட்ரூஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது. சுத்தம் செய்த பின் பயணிகளுடன் சென்னைக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com