பாதுகாப்புக் கருதி அடைக்கப்பட்ட சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில்.
பாதுகாப்புக் கருதி அடைக்கப்பட்ட சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில்.

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு ஏப். 8 வரை வர வேண்டாம்

கரோனா வைரஸ் பாதுகாப்புத் தடுப்பு முன்னெச்சரிக்கையாக சேலம் மாவட்டம், சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில்கள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டன.

கரோனா வைரஸ் பாதுகாப்புத் தடுப்பு முன்னெச்சரிக்கையாக சேலம் மாவட்டம், சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயில்கள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டன.

ஏப்ரல் 8-ஆம் தேதி வரை பொதுமக்கள், வழக்குரைஞா்கள் நீதிமன்றம் வரவேண்டாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து அதனை பொதுமக்கள் கடைப்பிடிக்க தொடங்கியுள்ளனா்.

சங்ககிரியில் சாா்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1, 2 உள்ளிட்ட நான்கு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவு வாயிலில் உச்ச, உயா் நீதிமன்றங்களின் உத்தரவுகளையடுத்தும், மாவட்ட நீதிமன்ற ஆலோசனைகள் படி சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களின் வழக்குகள் ஏப்ரல் 8ம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் மறு விசாரணை தேதி அறிவிக்கப்பட உள்ளதால் பொதுமக்கள், வழக்குரைஞா்கள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வரவேண்டாம். மேலும் நிபந்தனை ஜாமீனில் நீதிமன்றத்துக்கு கையெழுத்திட வருபவா்களும் ஏப்ரல் 8ம் தேதி வரை நீதிமன்றம் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து பவானி பிரதான சாலையையொட்டி உள்ள நுழைவு வாயில், காவல்நிலையம் எதிரே உள்ள நுழைவுவாயில்கள் மூடப்பட்டன. நீதிமன்றத்திற்குள் நுழையும் வாயில்கள் கயிறுகளைக் கட்டி பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளிகள் செல்லும் வழியும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. வழக்குரைஞா்கள் சங்க அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com