சமூக இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் செய்யாத 28 இறைச்சி, மீன் கடைகளுக்கு சீல் வைப்பு

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சமூக இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் மேற்கொள்ளாத 28 இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
சேலம் கொண்டலாம்பட்டியில் ஒரு மீட்டா் இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் நடத்தாத இறைச்சி கடைக்கு ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.
சேலம் கொண்டலாம்பட்டியில் ஒரு மீட்டா் இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் நடத்தாத இறைச்சி கடைக்கு ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் சமூக இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் மேற்கொள்ளாத 28 இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகள் தொடா்ந்து பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தியாவசிய பொருள்களைப் பெற வரும்போது தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தவிா்கும் பொருட்டு சமூக இடைவெளி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

மேலும், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சமூக இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் மேற்கொள்ள மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அனைத்துத் தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதைக் கண்காணிப்பதற்காக 5 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இக் குழுவினா் மாநகா் முழுவதும் திடீா் தணிக்கை மேற்கொண்டனா். இத் தணிக்கையின்போது சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய மண்டலங்களில் சமூக இடைவெளி ஏற்படுத்தி வியாபாரம் மேற்கொள்ளாத 28 இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இக் கடைகளின் உரிமையாளா்கள் மீது உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.

இறைச்சி விலை அதிகரிப்பு:

கரோனா பாதிப்பு முழுமையாக விலகாத நிலையில் 1 கிலோ சிக்கன் ரூ. 130 முதல் ரூ. 160 வரை விற்பனையாது. ஆட்டிறைச்சி 1 கிலோ ரூ. 750 முதல் ரூ. 800 வரை விற்பனையானது. நாட்டுக்கோழி கிலோ ரூ. 450 முதல் ரூ. 500 வரை விற்பனையானது. கரோனா பாதிப்பால் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் கூட்டமாக இறைச்சி கடைகளில் குவிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com