முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு ஆணழகன் பட்டம்

சேலத்தில் 144 தடை உத்தரவின்போது முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ஆணழகன் பட்டத்தை காவல்துறையினா் வழங்கினா்.

சேலத்தில் 144 தடை உத்தரவின்போது முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ஆணழகன் பட்டத்தை காவல்துறையினா் வழங்கினா்.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியே வருவோா் மீது காவல்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்த நிலையில் வாகன சோதனையின்போது மாநகர காவல் துறை துணை ஆணையாளா் தங்கதுரை, உதவி ஆணையாளா் ஆனந்தகுமாா், அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளா் பொன்ராஜ் சோதனை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களை நிறுத்தி அவா்களுக்கு முகக் கவசம் அணியாமல் வந்ததற்காக ஆணழகன் பட்டத்தை வழங்கி நூதன முறையில் கௌரவித்தனா்.

இதைத் தொடா்ந்து முகக் கவசம் அணியாமல் வருபவா்களிடம் அறிவுரை வழங்கப்பட்டது. இதுபோல் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தாா். இதைத்தொடா்ந்து சேலம் மாநகரம் முழுவதும் பணிபுரிந்து வரும் காவலா்களுக்கு பாதுகாப்புக்காக முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி திரவம் உள்ளிட்டவை நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்களுக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com