சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. 
சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு சுகாதாரத்துறையின் மூலம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதனையடுத்து சங்ககிரியில் இருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பாரங்களை ஏற்றிச் செல்வதற்கு வாடகைக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. சங்ககிரியில் லாரி ஓட்டுநர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகளை ஓட்டிச் சென்று வருவதால் சங்ககிரி வருவாய்த்துறையின் சார்பில் சங்ககிரி அருகே உள்ள புள்ளிப்பாளையம், பழைய பேருந்து நிலையம், குப்பனூர் ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து லாரி ஓட்டுநர்கள், காரில் பயணம் செய்பவர்கள் உள்பட அனைவரையும் பரிசோதனை செய்த பின்னர் அனுப்பி வைக்கின்றனர். இதில் வெளிமாநிலங்களிலிருந்து சங்ககிரி நகருக்கு வருபவர்களை பாதுகாப்பிற்காக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சங்ககிரியிலிருந்து செல்லும் அனைத்து லாரி ஓட்டுநர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.ஆர்.செல்வராஜ், செயலர் கே.கே.நடேசன், பொருளாளர் என். மோகன்குமார் ஆகியோர் தலைமையிலான நிர்வாக குழுவினர் ஆலோசனை செய்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இயங்கும் மூன்று பெட்ரோல்-டீசல் விற்பனையகத்தில் டீசல் பிடிக்க வரும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் கரோனா தொற்றிலிருந்து ஓட்டுநர்கள் அவர்களை எவ்வாறு தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை சங்கப் பணியாளர்கள் மூலம் வழங்கி வருகின்றனர்.  

சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட துண்டு பிரசுரத்தில்  ஓட்டுநர்கள் பயணத்தின் போது முகக் கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்,  பணியில் இருக்கும் பொழுது கையுறை அணிந்திருக்க வேண்டும்,  லாரியில் கிருமி நாசினி தெளிப்பான், கை கழுவும் திரவம் மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும், வாகனத்தை இயக்க துவங்கும் முன் லாரியின் டயர்கள், ஸ்ட்டியரிங், கியர் கம்பி, டேஷ் போர்டு, கதவுகள், கைபிடிகள் அனைத்தையும் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்,  மணிக்கு ஒரு முறை தங்களது கைகளை சோப்பு கொண்டு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும், வாகனத்தில் பயணம் செய்யும் போதும், உணவு மற்றும் தேனீர் அருந்துவதற்கு செல்லும் போதும் மிக கவனமாக சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும், பயணத்தின் போதும், உணவு உண்பதற்கு முன்பும், உணவு உண்ட பின்பும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும், புதியதாக வெளிநபர்கள் மற்றும் பயணிகள் எவரையும் வாகனத்தில் ஏற்றக்கூடாது,  பாரம் ஏற்றும் இடங்களிலும், இறக்கும் இடங்களிலும் மற்றும் வழியில் செல்லும் அரசு அலுவலங்களிலும் சமூக இடைவெளியை  தவறாமல் கடைபிடிக்க வேண்டும்,  பணியில் இருந்து புறப்படும் போது வீட்டுக்கு போன் செய்து தகவல் தெரிவியுங்கள்,  வாசல் கதவை யாராவது தயாராகத் திறந்து வைத்திருக்க வேண்டும், வீடுகளில் உள்ள அழைப்பு மணியை தொடாமல், கதவு கைப்பிடியை பிடிக்காமல் இருக்கவே இந்த ஏற்பாடு,  வாசல் கதவின் பக்கத்தில் ஒரு வாளியில் தண்ணீர், சோப் அல்லது பிளீச்சிங் பவுடர் வைக்கச் சொல்லுங்கள், வீட்டிற்கு சென்றவுடன் தான் அணிந்திருக்கும் உடைகள், பயணம் முடிந்து கொண்டு வந்த உடைகள் அனைத்தையும் ஒரு பக்கெட் தண்ணீரில் 15 மில்லி டெட்டால் கலந்து அதில் 30 நிமிடம் ஊற வைத்து பின்னர் சலவை செய்ய வேண்டும். 

சாவி, பேனா, சானிடைசர் பாட்டில், போன் எல்லா வற்றையும் வெளியே ஒரு பெட்டியில் வையுங்கள். கைகளை வாளியின் நீரால் கழுவுங்கள், தண்ணீரில் சிறிது நேரம் நில்லுங்கள். அந்த நேரத்தில், சாவி, பேனா உள்ளிட்ட பொருட்களை சானிடைசர் அல்லது டிஷ்யு பேப்பரால் நன்கு துடையுங்கள் .  மீண்டும் கைகளை சோப்பு போட்டுக் கழுவுங்கள், குளித்த பின்னரே வீட்டிற்குள் செல்ல வேண்டும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை விட்டு விலகி இருத்தல் வேண்டும்,  வெளி மாநிலத்திற்கு சென்று வந்தவர்கள் வீட்டில் தங்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், காய்ச்சல் மற்றும் கொரோனா சம்பந்தமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் முறைப்படி விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும், அனைத்து ஓட்டுனர்களும் தங்களது ஆன்ட்ராய்டு மொபைலில்  ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், அதன்படி காரோனா தொற்று அறிக்கை கண்டறியப்பட்டால் உடனடியாக 104 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துண்டு பிரசுரங்களை லாரி ஓட்டுநர்களிடத்தில் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com