தம்மம்பட்டியில் சுகாதாரத்தை கடைப்பிடிக்காத டீ கடைகளால் நோய் தொற்று அபாயம்!

தம்மம்பட்டியில் திறக்கப்பட்டுள்ள, டீக் கடைகள், கரும்புசாறு கடைகளில், சுகாதாரத்தை கடைப்பிடிக்காததால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தம்மம்பட்டியில் சுகாதாரத்தை கடைப்பிடிக்காத டீ கடைகளால் நோய் தொற்று அபாயம்!

தம்மம்பட்டியில் திறக்கப்பட்டுள்ள, டீக் கடைகள், கரும்புசாறு கடைகளில், சுகாதாரத்தை கடைப்பிடிக்காததால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தடை உத்தரவு, நேற்று தளர்த்தப்பட்டு, 34 வகையான கடைகளை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி பகுதியில் உள்ள, 50 க்கும் மேற்பட்ட ஓட்டல்கள்,  டீக்கடைகள்,மற்றும் சாலையோரம் உள்ள கரும்புச்சாறு கடைகள் உள்பட, மற்ற கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. இந்நிலையில், தம்மம்பட்டியில் உள்ள டீக்கடைகள், கரும்புச்சாறு கடைகளில், சுகாதாரத்துறை அறிவுறுத்திய, சுகாதார விதிமுறைகளை பின்பற்றவில்லை, இதனால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமூகநல ஆர்வலர்கள் கூறியதாவது, தம்மம்பட்டியில் உள்ள டீக்கடைகளில், சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி, வாடிக்கையாளர்களின் கைகளை கழுவ, கிருமி நாசினியான சானிடைசர் வைக்கப்படவில்லை. டீக்கடைகளில் டீ, காபி வழங்கப்படும் கண்ணாடி டம்ளர்களை, பயன்படுத்திய பின், ஒவ்வொரு முறையும் சுடுதண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்படுவதில்லை. டீக்கடைகளில் சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்காமல், வாடிக்கையாளர்கள் கும்பலாக  நிற்கின்றனர். 

இதேபோல்தான், சாலையோரம் உள்ள கரும்புச்சாறு கடைகளில், கண்ணாடி டம்ளர்களை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யாமல், கரும்புச்சாறு வழங்குகின்றனர். இதனால், நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இக்கடைகளில், சுகாதாரமுறையை கடைபிடிக்க, பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com