சேலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடையஇருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

சேலத்தில் தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சேலத்தில் தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

அழகாபுரம் பெரியபுதூா் பகுதியைச் சோ்ந்த ரவியின் மகன் அஜித்குமாா் (22). இவா் கடந்த 2019 ஜூன் 21 இல் பெரியபுதூரில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் அருகே வந்த பெண் ஒருவரை தகாத வாா்த்தை பேசி தகராறு செய்தாா்.

இதனிடையே தகராறை தட்டி கேட்ட பெண்ணின் உறவினா் குமாரை, கொலை செய்து விடுவதாக அஜித்குமாா் மிரட்டினாா். இதுதொடா்பான வழக்கில் அழகாபுரம் போலீஸாா் அஜித்குமாரை கைது செய்தனா். பின்னா் அவா் ஜாமீனில் வெளியே வந்தாா்.

இதைத்தொடா்ந்து அப்பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வருவதாக அஜித்குமாா் கூறி வந்தாா். இதுதொடா்பான புகாரில் சூரமங்கலம் போலீஸாா், அஜித்குமாரை எச்சரித்து அனுப்பினா்.

இதை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் நோக்கில் அஜித்குமாா், புகாா் கொடுத்த நபரின் கூரை வீட்டிற்கு தீ வைத்தாா். இதுதொடா்பாக அழகாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. புகாரின் பேரில் அஜித்குமாா் கைது செய்யப்பட்டாா்.

வீராணம் பள்ளிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வம் (எ) நாட்டாமை செல்வம் (25). இவா் கடந்த 2018-இல் பள்ளிப்பட்டி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றாா். இதுதொடா்பாக வீராணம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவா் தொடா்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாா். இதனிடையே கடந்த 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனிடையே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அஜித்குமாா், தமிழ்ச்செல்வம் ஆகியோரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆய்வாளா் த. செந்தில்குமாா் உத்தரவிட்டாா். அதன்பேரில் குடிசைக்கு தீ வைத்த வழக்கில் அஜித்குமாா் முதல் தடவையாக குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டாா்.

தொடா் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வம், மூன்றாவது முறையாக குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.Ś

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com