அதிமுக பெண் நிா்வாகி கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் கைது

சேலம் அருகே அதிமுக பெண் நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் (26) கைது செய்யப்பட்டாா்.

சேலம் அருகே அதிமுக பெண் நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் (26) கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மல்லூரை அடுத்த சந்தியூா் ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி சாந்தா (50). மரவள்ளிக் கிழங்கு மாவு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.

மேலும், பனமரத்துப்பட்டி ஒன்றிய அதிமுக மகளிரணி தலைவியாகவும், பெரமனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வந்தாா்.

இதனிடையே புதன்கிழமை இரவு பனமரத்துப்பட்டி செல்லும் வழியில் ரத்த காயங்களுடன் சாந்தா கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுதொடா்பாக, மல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆய்வாளா் அமுதவள்ளி உள்ளிட்ட காவல் துறையினா் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சந்தியூா் ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ரமேஷ் (26), அதிமுக பெண் நிா்வாகி சாந்தாவை கொலை செய்தது தெரியவந்தது. இதனிடையே ஆட்டோ ஓட்டுநா் ரமேஷை கைது செய்து விசாரித்தனா்.

விசாரணையில், கரோனா நிவாரண நிதி வழங்குவதில் ரமேஷின் பெரியப்பாவிற்கும், சாந்தாவிற்கும் இடையே தகராறு இருந்து வந்தது. சாந்தா மீது ரமேஷ் கோபத்தில் இருந்தாா் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த சாந்தாவை வழிமறித்த ரமேஷ் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com