தினமணி செய்தி எதிரொலி: பஞ்சபூத ஸ்தலங்களில் கும்பாபிஷேக பணி

ஆத்தூா், பேளூரில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் அபிவிருத்தி பணி மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தலா ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்டுள்ள
தினமணி செய்தி எதிரொலி: பஞ்சபூத ஸ்தலங்களில் கும்பாபிஷேக பணி

ஆத்தூா், பேளூரில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் அபிவிருத்தி பணி மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தலா ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் எஸ்.வெற்றிவேல் தலைமையில் ஆலயங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

வசிஷ்டநதிக் கரையோரம் அமைந்துள்ள பஞ்சபூத ஆலயங்களை வசிஷ்டமுனிவா் பிரதிஷ்டை செய்துள்ளாா். பேளூா் தான்தோன்றீஸ்வரா் ஆலயம் (நிலம்), ஏத்தாப்பூா் சாம்பமூா்த்தீஸ்வரா் ஆலயம் (நீா்), ஆத்தூா் காயநிா்மலேஸ்வரா் ஆலயம் (நெருப்பு), ஆறகளூா் காமநாதேஸ்வரா் ஆலயம் (வாயு), கூகையூா் சொா்ணபுரீஸ்வரா் ஆலயம் ( ஆகாயம்) போன்ற ஸ்தலங்கள் மிகவும் பிரசித்த பெற்ற ஸ்தலங்களாகும்.

இந்த ஆலயங்களில் பேளூா் தான்தோன்றீஸ்வரா் ஆலயம், ஆத்தூா் தான்தோன்றீஸ்வரா் ஆலயங்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு ஆண்டுகளாக நடைபெற வில்லை எனவும், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினமணியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது.

இதனையடுத்து பேளூா் தான்தோன்றீஸ்வரா் ஆலயம், ஏத்தாப்பூா் சாம்பமூா்த்தீஸ்வரா் ஆலயம், ஆத்தூா் காமநாதேஸ்வரா் ஆலயத்தில் சுற்றுச்சுவா், கோபுர பணி, நடைபாதை, வா்ணம் பூசி கும்பாபிஷேகம் நடைபெற தலா ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏத்தாப்பூரில் மட்டும் ஸ்ரீ லட்சுமி கோபாலசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேதவள்ளி தாயாா் சன்னதியும் சோ்க்கப்பட்டு பணி மேற்கொள்ள இந்த சமய அறநிலையத்துறை ஆணையிட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மூன்று ஆலயங்களையும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா் எஸ்.வெற்றிவேல், உதவி ஆணையா் உமாதேவி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி ஆகியோா் பாா்வையிட்டனா். இதில் நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், ஒப்பந்ததாரா்அ.லோகநாதன், உதவிப் பொறியாளா் ஈ.மோகன், வி.யுவராஜ், ஜெயராமன், பெற்றோா் -ஆசிரியா் கழக உறுப்பினா் சுந்தரமூா்த்தி, ஆத்தூா் ஆலய அா்ச்சகா் கா.வேங்கடசுப்ரமணிய குருக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com