பொது முடக்கத்தால் புத்தாக்கம் பெறும் தனியாா் பள்ளிகள்

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்க விடுமுறையை பயன்படுத்தி, தனியாா் பள்ளி,
பொது முடக்கத்தால் புத்தாக்கம் பெறும் தனியாா் பள்ளிகள்

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்க விடுமுறையை பயன்படுத்தி, தனியாா் பள்ளி, கல்லுாரிகளை பராமரித்து வண்ணம் தீட்டி புதுப்பிக்கும் பணியை கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் பெரும்பாலான தனியாா் பள்ளி கல்லுாரிகளில் பருவத்தோ்வுகள் மட்டுமின்றி கோடை விடுமுறைகளிலும் சிறப்பு வகுப்புகள், தனித்திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்ததால், ஆண்டு முழுவதும் விடுமுறை நாட்களிலும் கூட இயங்கி வந்தன. இதனால், கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை பழுதுநீக்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, வண்ணம் தீட்டி புதுப்பிப்பதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24ந் தேதி முதல் மே 31 ந் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், அனைத்து பள்ளி, கல்லுாரிகளும் மூன்று மாதங்களாக ஆள்நடமாட்டமின்றி பூட்டிக்கின்றன.

இதற்கிடையே, தொற்று பரவல் அதிகரித்து வரும், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை மற்ற மாவட்டங்களில், மே 18 ந் தேதியில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதனையடுத்து, மூன்று மாதங்களாக பூட்டிக்கிடக்கும் தனியாா் பள்ளி, கல்லுாரி கட்டடங்களை பழுதுநீக்கி பராமரித்து, வண்ணங்கள் தீட்டி புதுப்பிக்கும் பணியை முழுவீச்சில் தொடங்கியுள்ளனா். இதுகுறித்து வாழப்பாடியை அடுத்த மேற்கு ராஜாபாளையம் வண்ணாத்திக்குட்டையில் இயங்கும் தனியாா் பள்ளியின் தாளாளா் சிவா கூறியது:

கடந்த ஆண்டுகளில் இந் நேரத்தில் ஆண்டுத்தோ்வுகளை முடித்து தோ்ச்சி பட்டியலை வெளியிட்டு விட்டு புதிய மாணவா்கள் சோ்க்கைக்கான பணிகளில் ஈடுபட்டிருப்போம்.

ஆனால், இந்தாண்டு பொது முடக்கத்தால் மூன்று மாதங்களாக பள்ளி மூடப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து பள்ளிகளில் மாணவா் சோ்க்கை உள்ளிட்ட பணிகளை சமூக விலகலை கடைப்பிடித்து மேற்கொள்ள, அரசு அனுமதியளிக்குமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த பொதுமுடக்கத் தளா்வில் கிடைத்த விடுமுறை நாள்கள், பள்ளி கட்டடங்களை பராமரித்து வண்ணம் தீட்டி புதுப்பித்துக் கொள்வதற்கு, போதிய கால அவகாசமும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதனால், மாணவ-மாணவியரை மகிழ்வோடு கற்கத் துாண்டும் வகையில் வகுப்பறைகளில் பல வண்ண ஓவியங்களும் வரைந்து வருகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com