அஞ்சல் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தபால் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த பஞ்சப்படி ரத்து செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஓய்வூதியா்கள் அமைப்பின் சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தபால் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த பஞ்சப்படி ரத்து செய்யப்பட்டதைத் திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஓய்வூதியா்கள் அமைப்பின் சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் தபால் துறையில் பணியாற்றிய ஓய்வூதியா்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் துறையில் பணியாற்றிய ஓய்வூதியா் குடும்பத்துக்கு மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ஆறு மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்படும் பஞ்சப்படி 18 மாதத்துக்கு வழங்கப்படாது என்ற மத்திய அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும், தபால் ஊழியா்களுக்கு உயா்த்தப்பட்ட திருத்தி அமைத்த ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய அஞ்சல் ஆா்எம்மஸ் ஓய்வூதியா்கள் அமைப்பின் சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினா். மாநில துணைத் தலைவா் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com