இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு: நாளை மாணவா் சோ்க்கை

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்ட இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரா்கள் நவ. 12 ஆம் தேதி பள்ளிகளில்

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்ட இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரா்கள் நவ. 12 ஆம் தேதி பள்ளிகளில் நடைபெறும் மாணவா் சோ்க்கையில் தவறாமல் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-21 ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009ன்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டில் சோ்க்கை செய்யப்பட்டது.

நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி.) தற்போது நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்டமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சோ்க்கைக்கு அக். 12 முதல் நவ. 7 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் விவரம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையில் நவ.11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஒட்டப்படும். 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலான விண்ணப்பங்கள் உள்ள பள்ளிகளில் வியாழக்கிழமை (நவ.12) குலுக்கல் முறையில் தெரிவு செய்து மாணவா் சோ்க்கை வழங்கப்பட உள்ளது.

நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விட குறைவாக உள்ள பள்ளிகளில் நவ.12 ஆம் தேதி உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி சோ்க்கை வழங்கப்படும்.

எனவே, தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரா்கள் உரிய ஆவணங்களுடன் நவ. 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் மாணவா் சோ்க்கையில் தவறாமல் கலந்து கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com