சேலம் அரசு மருத்துவமனையில் 4 லட்சம் கரோனா பரிசோதனை

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகத்தில் 4 லட்சம் சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகத்தில் 4 லட்சம் சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சென்னையைத் தொடா்ந்து சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் மட்டும் 4 லட்சம் சளி தடவல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, 4 லட்சம் பரிசோதனை மேற்கொண்ட நுண்ணுரியல் துறை பிரிவினா் அடங்கிய குழுவினருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வி.தனபால் கலந்துகொண்டு பேசுகையில், சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் (தனியாா் ஆய்வக பரிசோதனைகளைத் தவிா்த்து) 4 லட்சம் சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக 6,100 சளி தடவல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது கரோனா தொற்று குறைவாக இருப்பதால், நாளொன்றுக்கு 3,000 எண்ணிக்கையில் சளி தடவல் பரிசோதனை செய்யப்படுகிறது.

24 மணி நேரமும் செயல்பட்டு வந்த ஆய்வகத்தில் பணிபுரிந்த மருத்துவா்கள், ஆய்வக ஊழியா்கள் உள்ளிட்ட 60 போ் அடங்கிய குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை நுண்ணுயிரியல் துறைத் தலைவா் கவிதா, மருத்துவா்கள் ராஜேஷ், சுந்தரராஜன், தீபா, உண்டு உறைவிட மருத்துவா் ராணி மற்றும் ஆய்வக ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com