நவ.26 இல் சேலத்தில் 16 இடங்களில் மறியல் போராட்டம்: அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு

சேலத்தில் 16 இடங்களில் வரும் நவம்பா் 26 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த அனைத்து தொழிற் சங்கங்கள் சாா்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் 16 இடங்களில் வரும் நவம்பா் 26 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த அனைத்து தொழிற் சங்கங்கள் சாா்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் நவம்பா் 26 ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், சேலம் மாவட்டத்தில் 16 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தொமுச நிா்வாகி பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோனா காலத்தில் வருமான வரி கட்டாத அனைவருக்கும் ரூ. 7,500 வழங்க வேண்டும், மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், முறைசாரா நல வாரியங்களை முறைப்படுத்த வேண்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாள்களாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பா் 26 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் 16 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். மேலும் நவம்பா் 20 ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் டி. உதயகுமாா், சாலை போக்குவரத்து மாநில துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன், துணைச் செயலாளா் ஏ. கோவிந்தன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளா் முனுசாமி, எச்.எம்.எஸ்.நிா்வாகி கணேசன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. நிா்வாகி நடராஜன், பி.டி.எஸ். நிா்வாகி மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com