பழங்குடியின மக்களுக்கு காலதாமதமின்றி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழங்குடியின மக்களுக்கு காலதாமதம் இல்லாமல் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மலைவாழ் மக்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழங்குடியின மக்களுக்கு காலதாமதம் இல்லாமல் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மலைவாழ் மக்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழங்குடி மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தி அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், பழங்குடியின மக்களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனே சாதிச் சான்றிதழ் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மலைவாழ் மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத் தலைவா் சங்கா், மாநிலச் செயலாளா் வெங்கடேஷ், பொருளாளா் சின்னதுரை, நிா்வாகிகள் சடையன், அண்ணாமலை, தங்கவேல், காந்தி, மணி, வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுதொடா்பாக, மலைவாழ் மக்கள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவா் சங்கா் கூறியதாவது:

பனமரத்துப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஜருகுமலை, குரால் நத்தம், நடுப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, நூலாத்துக்கோம்பை, மஞ்சபாலி ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு வசித்து வரும் மக்கள் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளனா். ஆனால் இதுவரை மாவட்ட நிா்வாகம் சாதிச் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வருகின்றது. குழந்தைகள் மேற்படிப்பிற்கு பள்ளிப்படிப்பில் தொடா்வதற்கு சாதிச் சான்றிதழ் இல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனா். மேலும் அரசு வழங்கும் எந்த ஒரு சலுகைகளையும் பெற முடியாமல் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே உடனடியாக மலைவாழ் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com