முதல்வா் வருகை: அமைச்சா் ஆய்வு

மேட்டூா் அருகே பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெறும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க

மேட்டூா் அருகே பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெறும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் வருவதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

நங்கவள்ளி ஒன்றியம், வனவாசியில் முடிவுற்ற மற்றும் புதிய பல்வேறு திட்டப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளாா். அதற்காக வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயில் குடமுழுக்கு முதல்வா் தலைமையில் நடைபெற

உள்ளாா். இதையடுத்து முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். பின்பு கோயில் பிரகாரங்களை அமைச்சா் சுற்றி வந்து தரிசனம் செய்தாா். பின்னா் எடப்பாடி, சேலம் ஆகிய இடங்களில் உள்ள 7 கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனா். உடன் சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன், மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணன், அறநிலையத்துறை இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் உமா தேவி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com