மீண்டும் பணிகளைத் தொடங்கியது சேலம் மாக்னசைட் சுரங்கம்

சேலம் மாக்னசைட் சுரங்கப் பணிகள் மீண்டும் வியாழக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாக்னசைட் சுரங்கப் பணிகள் மீண்டும் வியாழக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம், வனவாசி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

சேலத்தில் ஏற்கெனவே மூடப்பட்டிருந்த தமிழ்நாடு மாக்னசைட் லிமிடெட் நிறுவனம் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். கடந்த 1979 இல் மாக்னசைட் நிறுவனத்தைத் தொடக்கிவைத்தாா். இது அரசு பொதுத் துறை நிறுவனாகும். இதன் ஆண்டு வருமானம் ரூ. 100 கோடி.

ஓமலூா் வட்டம், தாத்தையங்காா்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மாக்னசைட் சுரங்கத்தில் மாக்னசைட், டியூனைட் கனிமங்கள் இயந்திர மயமாக்கப்பட்ட திறந்தவெளி சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகின்றன. நாட்டின் மொத்த மாக்னசைட் கனிம வளத்தில் 70 சதவீதம் தமிழகத்தில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் இருந்து கிடைக்கிறது.

இரும்பு, ரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியமான வெப்பம் தாங்கும் உலை,

சூளைக் கற்கள் உற்பத்தி செய்ய இக்கனிமம் பயன்படுகிறது. இத்துடன் இணைத் தனிமமாகக் கிடைக்கும் டியூனைட்டும் இரும்புத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிறுவனம் தனது இரு வேறு தொழிற்சாலைகளில் மாக்னசைட் தனிமத்தை முழு எரியூட்டப்பட்ட மாக்னசைட், மித எரியூட்டப்பட்ட மாக்னசைட் என்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்கிறது. 2018-ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் வேண்டி சுரங்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டு, குறிப்பு விதிமுறைகள் பெறப்பட்டு 2020, ஜனவரி 29 இல் பொதுமக்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு பிறகு மாநில சுற்றுச்சூழல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. புவியியல், சுரங்கத் துறைக்கு இழப்பீடாக ரூ. 72 கோடி செலுத்தப்பட்டு தடையில்லாச் சான்றும் பெறப்பட்டது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு நவம்பா் 10 ஆம் தேதி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து சுரங்கம் செயல்பாடுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. சுரங்கப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் 534 தொழிலாளா்கள் நேரடியாகவும், 2,000 தொழிலாளா்கள் மறைமுகமாகவும் பயனடைவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com