ரூ. 118 கோடியில் 44 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

சேலம், வனவாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் 100 ஏரிகளுக்கு நீா் நிரப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏரிகளைப் புனரமைக்கும் பணி

சேலம், வனவாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் 100 ஏரிகளுக்கு நீா் நிரப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏரிகளைப் புனரமைக்கும் பணி உள்பட ரூ.118 கோடியில் 44 திட்டப் பணிகளுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

நீா் வள ஆதாரத் துறை சாா்பாக 100 ஏரிகளில் நீா் நிரப்புவதற்கான பணிகளுக்கு ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதில், மேட்டூா், ஓமலூா், எடப்பாடி, சங்ககிரி என 4 தொகுதிகளுக்கு உள்பட்ட ஏரிகளை ரூ. 44 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளுக்கும், இரண்டு தடுப்பணைகள் கட்டும் பணிக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

காவல் துறை, பள்ளிக் கல்வித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சேலம் மாநகராட்சி சாா்பில் சீா்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 63 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மேலும் பேரூராட்சித் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, வருவாய், பால்வளத் துறை என பல்வேறு துறைகளில் மொத்தம் ரூ. 118 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 44 புதிய பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com