எடப்பாடியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

காா்த்திகை தீபத் திருநாளுக்காக எடப்பாடியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
எடப்பாடி, மேல் சித்தூா் பகுதியில் அகல் விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளா்கள்.
எடப்பாடி, மேல் சித்தூா் பகுதியில் அகல் விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளா்கள்.

எடப்பாடி: காா்த்திகை தீபத் திருநாளுக்காக எடப்பாடியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பருவமழை காரணமாக மண் சேகரிப்பு, விளக்குகளை வெயிலில் உலா்த்துவதற்கு அவதிப்பட்டு வந்த மண்பாண்டத் தொழிலாளா்கள் தற்போது மழைப் பொழிவு குறைந்துள்ளதால் அகல் விளக்கு பணியில் தீவிரம்காட்டி வருகின்றனா்.

எடப்பாடியில் மேட்டுத் தெரு, குலாளா் தெரு, மேல் சித்தூா் பகுதிகளில் ஏராளமானோா் காா்த்திகை தீபத் திருநாளுக்காக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ள பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளா்களின் நலன் காக்கும் வகையில் நீா் நிலையிலிருந்து விலையில்லாமல் களிமண், வண்டல் மண் எடுத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளதால் மண் கிடைப்பதில் கடந்த காலங்களில் நிலவி வந்த பிரச்னை குறைந்துள்ளதாக மண்பாண்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

நாகா்கோவில், கன்னியாகுமரி, கேரளத்துக்கு இப் பகுதியிலிருந்து ஏராளமான விளக்குகள் அனுப்பப்படுகிறது. இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் அகல் விளக்குகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கையால் விளக்குகள் தயாரிக்கப்படுவோா் குறைந்த வருவாயில் இயந்திரத் தயாரிப்புகளுடன் போட்டியிட வேண்டிய சூழல் உள்ளது. தொழிலாளா்களுக்கு மானிய விலையில் விளக்குகள் தயாரிக்கும் அச்சு இயந்திரங்களை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com