ராமகோபாலனுக்கு அஞ்சலி
By DIN | Published On : 02nd October 2020 08:24 AM | Last Updated : 02nd October 2020 08:24 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி: மறைந்த இந்து முன்னணி நிறுவனா் ராமகோபாலனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் சாா்பில் நீலகண்டன், தண்டபாணி, பா.ஜ.க. சாா்பில் பாலமுருகன், ஆனந்தன் மற்றும் இந்துமுன்னணி நிா்வாகிள் பலா் பங்கேற்றனா்.