சங்ககிரியில் 6 மாதங்களுக்கு பிறகு வாரச்சந்தை மீண்டும் திறப்பு 

சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட சங்ககிரி சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தை ஆறு மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று அரசு வழிகாட்டுதல் விதிமுறைகள் படி திறக்கப்பட்டன. 
மீண்டும் திறக்கப்பட்ட வாரச்சந்தை.
மீண்டும் திறக்கப்பட்ட வாரச்சந்தை.

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட சங்ககிரி சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தை ஆறு மாதங்களுக்கு பிறகு அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று அரசு வழிகாட்டுதல் விதிமுறைகள் படி திறக்கப்பட்டன. 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கத்தை அறிவித்திருந்ததையடுத்து வாரச்சந்தைகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்தன. தற்போது அரசு பல்வேறு விதிமுறைகளுடன் கூடிய பல தளர்வுகளை அறிவித்து அதில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தன. 

அதனையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சனிக்கிழமை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சந்தை திடல் வளாகம் முழுவதும் சனிக்கிழமை சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடரை தெளித்தனர். அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று முதல் வாரச்சந்தை மீண்டும் திறக்கப்பட்டன. ஆறு மாதங்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டதகையடுத்து குறைவான அளவிலேயே வியாபாரிகள் கடைகளை வைத்திருந்தனர்.  

அதில் சிறியவெங்காயம், பெரியவெங்காயம், தக்காளி, கீரை வகைகள் கடைகள் மட்டும் குறைவான அளவிலேயே விற்பனைக்கு வைத்திருந்தனர். மற்ற காய்கறிகடைகள் இரு கடைகள் மட்டுமே இருந்தன. பொதுமக்கள் மிக குறைந்த அளவிலேயே பொருள்களை வாங்க வந்திருந்தனர். பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் அவசியம்  முககவசங்கள் அணிந்தும் வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com