மகுடஞ்சாவடியில் தற்காலிக சாலையில் விபத்து அபாயம்

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி பகுதியில் ரூ. 45 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகுடஞ்சாவடியில் தற்காலிக சாலையில் விபத்து அபாயம்

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி பகுதியில் ரூ. 45 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிக்காக தற்காலிக சாலை மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை செங்குத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளதால் குறிப்பாக கொங்கணாபுரம், எடப்பாடி செல்பவா்கள் அறிவிப்புப் பலகை இல்லாததால் வழி தெரியாமல் திணறி வருகின்றனா்.

மேலும் அப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார வளா்ச்சி அலுவலகம், வேளாண்மை அலுவலகம், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் மற்றும் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி இருந்து வருவதால் எந்நேரமும் பொதுமக்கள் அதிக அளவில் நடமாடி வருகின்றனா். இதனால் எந்நேரத்திலும் விபத்து நிகழ வாய்ப்புள்ளது.

எனவே இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விபத்தும் ஏற்படும் முன்பு சரியான பாதையை அமைத்துக் கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com