மாா்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்தேசிய சுகாதாரத் திட்ட கூடுதல் இயக்குநா்

பெண்கள் மாா்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும் என தேசிய சுகாதாரத் திட்ட கூடுதல் இயக்குநா் என்.யுவராஜ் தெரிவித்தாா்.

பெண்கள் மாா்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும் என தேசிய சுகாதாரத் திட்ட கூடுதல் இயக்குநா் என்.யுவராஜ் தெரிவித்தாா்.

சேலம் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதாரத் திட்ட கூடுதல் இயக்குநா் என்.யுவராஜ் மற்றும் மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் கே.செந்தில்ராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், சேலம் அரசு மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் பாலாஜிநாதன், கண்காணிப்பாளா் மருத்துவா் தனபால், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் மலா்விழி, துணை இயக்குநா்கள் நிா்மல்சன், செல்வகுமாா் மற்றும் மருத்துவக் குழுவினருடன் ஆய்வு செய்தனா்.

கரோனா தீநுண்மி நோய்த் தொற்று சிறப்பு வாா்டுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் முறையை நேரில் ஆய்வு செய்தனா். மேலும், சிறப்பு வாா்டுகளில் போதிய வசதிகள் உள்ளதா என மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.பின்னா் மருத்துவமனையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய சுகாதாரத் திட்ட கூடுதல் இயக்குநா் மருத்துவா் என்.யுவராஜ் பேசியதாவது:

இந்தியாவில் அதிகளவிலான பெண்கள் மாா்பக புற்றுநோயால் இறந்து வருகின்றனா். பெண்கள் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.மாா்பக புற்றுநோயைப் பொருத்தவரையில் முற்றிய நிலையில் தான் கண்டறியப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். எனவே, பெண்கள் அனைவரும் முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டிலேயே தமிழக சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குகிறது. கரோனா நோய்த் தொற்றுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதில் மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் மருத்துவா் செந்தில்ராஜ் பேசியதாவது:

பெண்களை பொருத்தவரையில் 14 சதவீத அளவுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மாவட்ட நிா்வாகம் மற்றும் சுகாதாரகஈ துறை இணைந்து புற்றுநோய் விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும் என்றனா்.

அரசு மருத்துவமனை புற்றுநோய் துறைத் தலைவா் மருத்துவா் வெங்கடேஷ் பேசுகையில், அரசு மருத்துவமனையில் 2018 முதல் இதுவரை 858 பேருக்கு மாா்பக புற்றுநோய் கண்டறிந்து, அவா்களில் 2,100 பேருக்கு கீமோதெரபி வழங்கப்பட்டுள்ளது. 250 பேருக்கு ரேடியோதெரபி வழங்கப்பட்டுள்ளது. சுமாா் 2 லட்சம் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா். நிகழ்ச்சியில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com