அஞ்சலகங்களில் தங்கப் பத்திரங்கள் விற்பனை

சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஒருவா் ஒரு கிராம் முதல் 4,000 கிராம் வரை தங்கப் பத்திரம் வாங்கலாம். தங்கப் பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள் ஆகும். இறுதியில், அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். இந்தத் திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசா்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவீதம் வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் முதலீட்டாளா்களின் கணக்கில் சோ்க்கப்படும்.

இது தங்கப் பத்திர முதலீட்டாளா்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும். இந்தத் திட்டம் அக்.12 முதல் அக்.16 வரை அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.இதில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,051 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலங்களில் தங்கப் பத்திரத்தில் பணம் செலுத்துபவா்களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். சுமாா் 20 நாள்களுக்குப் பிறகு தங்கப் பத்திரம் வழங்கப்படும். முதலீடு செய்பவா்கள் அஞ்சல் அலுவலகங்களை அணுகலாம்.இதில் முதலீடு செய்ய முதலீடு செய்பவரின் ஆதாா் எண், பான் எண் மற்றும் வங்கிக் கணக்கு மிக அவசியமாகும். தங்கப் பத்திரங்களின் மூலம் வங்கிகளில் தேவைப்படும் போது கடன் பெற்றுக் கொள்ளலாம் என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com