18 ஆண்டுகளாக ஆதரவற்றோரின் பசிப்பிணியைப் போக்கி வரும் தம்பதி

வாழப்பாடி அருகே 18 ஆண்டுகளாக வள்ளலாா் பெயரில் தருமச்சாலை நடத்தி வரும் தம்பதியா், 5 கிராமங்களிலுள்ள 250 ஆதரவற்றோா்,
18 ஆண்டுகளாக ஆதரவற்றோரின் பசிப்பிணியைப் போக்கி வரும் தம்பதி

வாழப்பாடி அருகே 18 ஆண்டுகளாக வள்ளலாா் பெயரில் தருமச்சாலை நடத்தி வரும் தம்பதியா், 5 கிராமங்களிலுள்ள 250 ஆதரவற்றோா், முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக இருப்பிடம் தேடிச்சென்று உணவு வழங்கி பசிப்பிணியை போக்கும் சேவையாற்றி வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாது செல்வராஜ் (63). இவரது மனைவி கலாவதி (53). இத் தம்பதியா், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு வடலூரில் உள்ள வள்ளலாா் மடத்துக்குச் சென்று அங்குள்ள தீப மெளனகுரு அடிகளாா் என்பவரை சந்தித்தனா்.

அவரது வழிகாட்டுதலின்பேரில், மற்றவா்களின் பசியைப் போக்குவதற்கு உதவும் மனம் கொண்டவா்களை அணுகி அரிசி, பருப்பு ஆகியவற்றை சேகரித்து ஏழை எளியோா், ஆதரவற்றோா், முதியோா்களுக்கு தினந்தோறும் ஒரு வேளை உணவு வழங்க முடிவு செய்தனா்.

இதற்காக, சிங்கிபுரம் கிராமத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலாா் நித்திய சத்திய தருமச்சாலையை தொடங்கினா். ஆரம்பநிலையில் கஞ்சி உணவு வழங்கி வந்தனா்.

பசிப்பிணியைப் போக்கும் இவா்களது சேவைக்கு சிலா் பொருளுதவி செய்ய முன்வந்தனா். இதனைத்தொடா்ந்து, கடந்த 18 ஆண்டுகளாக தங்களது தருமச்சாலைக்கு வரும் அனைவருக்கும் எப்போதும் இல்லையென கூறாமல் தினந்தோறும் உணவு வழங்கி வருகின்றனா்.

கடந்த 4 ஆண்டுகளாக, சிங்கிபுரம், அதன் சுற்றுப்புற கிராமங்களான பழனியாபுரம், மன்னாா்பாளையம், சோமம்பட்டி விலாரிபாளையம் ஆகிய 5 கிராமத்திலுள்ள 250 ஆதரவற்றோா், முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தினந்தோறும் இருப்பிடத்திற்கே தேடிச்சென்று ஒருவேளை உணவு வழங்கி வருகின்றனா்.

இத்தம்பதியருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com