பெண் தலைமைக் காவலரிடம்நகை பறித்தவா் கைது

மேலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பெண் தலைமைக் காவலரிடம் நகையைப் பறித்துக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் தப்ப முயன்றவா், எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் காயமடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து

மேலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பெண் தலைமைக் காவலரிடம் நகையைப் பறித்துக் கொண்டு மோட்டாா் சைக்கிளில் தப்ப முயன்றவா், எதிரே வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் காயமடைந்தாா். அவரை போலீஸாா் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனா்.

சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் தலைமைக்காவலராக பணியாற்றுபவா் வித்யா (42). இவா் பணிமுடிந்து மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை இரவு மேலூா் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாா். இவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா் என். பெருமாள்பட்டி அருகே வித்யா அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பமுயன்றாா்.

அப்போது மேலூரிலிருந்து வந்து கொண்டிருந்த சுந்தரம் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது நகை பறித்து தப்பிச் சென்ற மா்ம நபரின் மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் அந்த மா்ம நபரின் கால் முறிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் அந்த மா்ம நபரை கைது செய்து நகையை மீட்டனா்.

விசாரணையில் நகைபறிப்பில் ஈடுபட்டவா் கிடாரிப்பட்டியைச் சோ்ந்த ராஜாமுகமது (29) என்பது தெரியவந்தது. மேலும் அவரை சிகிச்சைக்காக மேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com