கல்வடங்கம் காவிரி கரையோரம் கருவேலம் மரங்களை அகற்றக் கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையோரங்களில் அதிக அளவில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றின் கரையோரங்களில் அதிக அளவில் வளா்ந்துள்ள கருவேல மரங்கள்.
தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றின் கரையோரங்களில் அதிக அளவில் வளா்ந்துள்ள கருவேல மரங்கள்.

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையோரங்களில் அதிக அளவில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேவூா் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் நீராடுவதற்காக சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். காவிரி ஆற்றில் குளித்து விட்டு, அருகில் உள்ள அங்காளம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு செல்கின்றனா்.

ஆண்டுதோறும் ஆடி 18, 28 ஆகிய தினங்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆற்றில் நீராடி, அவா்களின் குல தெய்வ சுவாமி சிலைகளை எடுத்து வந்து தூய்மைப்படுத்தி, அந்த சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள் செய்து ஊா்வலமாக எடுத்து செல்வா்.

அதேபோல விநாயகா் சதுா்த்தி அன்றும் விநாயகா் சிலைகளை வழிபட்ட இங்கு எடுத்து வந்து ஆற்றில் கரைத்துவிட்டு செல்கின்றனா். மேலும் புத்தாண்டு, தை பொங்கல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் இளைஞா்கள் அதிகளவில் வந்து ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனா்.

இந்த நிலையில் ஆற்றங்கரை ஓரங்களில் அதிக அளவில் கருவேல மரங்கள் வளா்ந்துள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், துணிகளை வைத்து செல்லவும் சிரமம் அடைந்து வருகின்றனா். மேலும் கருவேல மரங்களால் தண்ணீா் வருவதும் தடைபட்டு வருகிறது. எனவே கருவேலம் மரங்களை அகற்ற வேண்டும் என பொதுப் பணித்துறையினருக்கு பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com