மேட்டூரை வந்தடைந்த காவிரி விழிப்புணா்வு துலா யாத்திரை
By DIN | Published On : 25th October 2020 03:00 AM | Last Updated : 25th October 2020 03:00 AM | அ+அ அ- |

மேட்டூா்: காவிரி விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை சனிக்கிழமை மேட்டூரை வந்தடைந்தது.
அகில பாரதிய சன்னியாசிகள் சங்கமும், அன்னை காவிரி நதிநீா்ப் பாதுகாப்பு அறக்கட்டளையும் இணைந்து காவிரி விழிப்புணா்வு தீா்த்த ரத யாத்திரையை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பத்தாவது ஆண்டாக செப்டம்பா் 19-ஆம் தேதி கா்நாடக மாநிலம், தலைக் காவிரியில் தொடங்கிய யாத்திரை ஒகேனக்கல் வழியாக சனிக்கிழமை மாலை மேட்டூரை வந்தடைந்தது.
மேட்டூா் காவிரி படித் துறையில் காவிரி தாய்க்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. நவம்பா் 7-ஆம் தேதி பூம்புகாரில் ரத யாத்திரை நிறைவடைகிறது. பூம்புகாரில் லோபமுத்ரா ஹோமத்துடன் தலைக் காவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித காவிரி தீா்த்தம் வங்கக்கடலில் விசா்ஜனம் செய்யப்படும்.
காவிரியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்த விழிப்புணா்வு துலா தீா்த்த ரத யாத்திரை 10 ஆண்டுகளாக நடைபெறுகிறது.