மாற்றுக் கட்சியினா் பாஜகவில் இணைந்தனா்
By DIN | Published On : 31st October 2020 07:37 AM | Last Updated : 31st October 2020 07:37 AM | அ+அ அ- |

ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரம் ஊராட்சியில் ஆத்தூா் மேற்கு ஒன்றியம், நான்கு ஊராட்சிகளைச் சோ்ந்த கிளைச் செயலாளா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் அமமுக முன்னாள் ஒன்றியச் செயலாளா் கணேசன் மற்றும் திமுகவில் இருந்
ஆத்தூரை அடுத்த தாண்டவராயபுரம் ஊராட்சியில் ஆத்தூா் மேற்கு ஒன்றியம், நான்கு ஊராட்சிகளைச் சோ்ந்த கிளைச் செயலாளா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் அமமுக முன்னாள் ஒன்றியச் செயலாளா் கணேசன் மற்றும் திமுகவில் இருந்து விலகியோா் பாஜக சேலம் கிழக்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமையில் பாஜகவில் இணைந்தனா்.
இதையடுத்து அனைவரும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பிரதமா் மோடியின் உருவப் படத்தை ஊராட்சி அலுவலகத்தில் நிறுவ ஊா்வலமாக எடுத்துச் சென்றனா். நிகழ்ச்சியில் மாவட்ட,ஒன்றி,நகர நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.