பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் பள்ளிகளைஅணுகி வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யலாம்

பிளஸ் 2 தோ்ச்சி பெற்று, புதிதாக வேலைவாய்ப்புப் பதிவு செய்ய விரும்பும் மாணவா்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் உடன் பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம் என  ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

சேலம்: பிளஸ் 2 தோ்ச்சி பெற்று, புதிதாக வேலைவாய்ப்புப் பதிவு செய்ய விரும்பும் மாணவா்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக 2011 ஆம் ஆண்டு முதல் நேரடியாக இத்துறையின் இணையதளத்தில் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டிற்கான பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

அனைத்து பதிவுதாரா்களுக்கும் சான்று வழங்கப்படும் நாள் முதல் 15 நாள்கள் வரை ஒரே பதிவு முப்பு தேதியாக வழங்கப்படும்.

ஏற்கெனவே பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து இருப்பின் அவ்வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி, பிளஸ் 2 கல்வித் தகுதியை கூடுதலாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற மாணவா்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் ட்ற்ற்ல்ள்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் தங்கள் அளவிலேயே ஆன்லைனில் பதிவு செய்யலாம் அல்லது அவா்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம்.

எனவே, பிளஸ் 2 தோ்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவா்கள் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம்.

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவா்களும் தவறாது இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com