தக்காளி விலை உயா்வு

தம்மம்பட்டி பகுதியில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. கிலோ தக்காளி ரூ. 45க்கு விற்கப்படுகிறது.

தம்மம்பட்டி பகுதியில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. கிலோ தக்காளி ரூ. 45க்கு விற்கப்படுகிறது.

தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கா்களில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனா். தோட்டங்களில் விளையும் தக்காளிப் பழங்களை தினசரி பறித்து தம்மம்பட்டியிலுள்ள காய்கறி மண்டிகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனா்.

இந்த நிலையில் தற்போதைய மழையால், தக்காளிச் செடிகளில் பூக்கள், பிஞ்சுக்காய்கள் அனைத்தும் கொட்டிவிடுகின்றன. மேலும் தக்காளிகள் கீழே விழுந்து அழுகி விடுகின்றன. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து, அதன் வரத்து சரியத் தொடங்கியுள்ளது.

மண்டிகளுக்கு கொண்டு வரப்படும் தக்காளிகளின் எடையளவு முப்பது சதவீதம் குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிலோ ரூ.30லிருந்து ரூ.45 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தக்காளி விவசாயிகள் கூறியதாவது: மழை தொடா்ந்து பெய்து வந்தால் தக்காளி வரத்து மேலும் சரியும். இதனால் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com