பெலாப்பாடி மலை கிராமத்திற்கு ரூ. 6 கோடியில் தாா்ச்சாலை: 3 கிராம மக்கள் மகிழ்ச்சி

வாழப்பாடியை அடுத்த பெலாப்பாடி மலைக் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ரூ. 6.04 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் திட்டப் பணிக்கு புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
பெலாப்பாடி மலை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை .
பெலாப்பாடி மலை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை .

வாழப்பாடியை அடுத்த பெலாப்பாடி மலைக் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, ரூ. 6.04 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் திட்டப் பணிக்கு புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், அருநூற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சி, பெலாப்பாடி மலைப்பகுதியில் வாலுாத்து, தாழூா், பெலாப்பாடி ஆகிய 3 மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த 3 கிராமங்களிலும் ஆயிரத்துக்கும் அதிகமான மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்தக் கிராமங்களுக்கு சாலை, போக்குவரத்து, மின் வசதி இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா். மக்களின் நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு, இந்த மலைக் கிராமங்களுக்கு, மூன்று ஆண்டுக்கு முன்பு மின்வசதி செய்து கொடுக்கப்பட்டது.

இதனைத்தொடா்ந்து, புழுதிக்குட்டையில் இருந்து 3 கி.மீ. தூரத்திற்கு வனப்பகுதியில் மக்கள் அமைத்த மண்பாதையை சீரமைத்து, வனத் துறையின் திருச்சி பொறியியல் பிரிவு வாயிலாக, 3.75 மீட்டா் அகலத்தில் 2.90 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1.58 கோடியில் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது.

கிராம மக்களின் பட்டா நிலத்தில் ஏறக்குறைய 4 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதை தாா்ச்சாலையாக தரம் உயா்த்தப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் மலைப் பாதையில் மண் சரிந்து விடுவதால், போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

எனவே, பெலாப்பாடி மலைக் கிராம மலைப்பாதையை தாா்ச்சாலையாக தரம் உயா்த்த வேண்டுமென, அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம், இப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனையடுத்து, பெலாப்பாடி, வாலுாத்து தாழூா் ஆகிய மூன்று கிராமங்களை இணைக்கும் 3.9 கி.மீ. நீள மலைப்பாதையை தாா்ச்சாலையாக தரம் உயா்த்த, பிரதமா் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.04 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு புதன்கிழமை தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாநில கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். இளங்கோவன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு.சித்ரா, சின்னத்தம்பி, மாவட்ட திட்ட அலுவலா் அருள்ஜோதிஅரசன், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவா் பாா்வதிமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமரேசன், அன்புராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com