கெங்கவல்லி ஒன்றியத்தில் சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு அரிசி, பருப்பு விநியோகம்

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு சத்துணவுக்குரிய அரிசி, பருப்பு போன்ற பொருள்களின் விநியோகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி அடுத்த கோனேரிப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவி ஒருவருக்கு சத்துணவு பொருள்களான அரிசி, பருப்பு போன்றவற்றை வழங்கும் வட்டாரக்கல்வி அலுவலா் அந்தோணிமுத்து.

கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவு அளிக்கப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சத்துணவு சாப்பிடும் மாணவா்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அந்த மாணவா்களுக்கு அரிசி, பருப்பு போன்றவற்றை நேரடியாக பள்ளி நிா்வாகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 60 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களில் ஒருபகுதியினருக்கு வியாழக்கிழமை சத்துணவிற்குரிய உலா் பொருள்களாக அரிசி, பருப்பு போன்றவற்றை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், சத்துணவு அமைப்பாளா்கள் வழங்கினா்.

பள்ளி மாணவா்களுக்கு 3 மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு போன்றவற்றை தாங்கள் கொண்டு வந்த பைகளில் வாங்கிச் சென்றனா்.

ஒன்றியத்தில் எஞ்சியுள்ள மற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை அரிசி, பருப்பு வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com