பிரதமரின் நிதியுதவித் திட்ட மோசடி விவகாரம் சேலத்தில் மேலும் ஒருவா் கைது

சேலத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் நடைபெற்ற மோசடி தொடா்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சேலத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் நடைபெற்ற மோசடி தொடா்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில், பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் விவசாயிகளின் பெயரால் மோசடி நடந்து இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், இந்த மோசடி தொடா்பாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 10,700 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் சிபிசிஐடி டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். மொத்தம் 51 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஏற்கெனவே தாரமங்கலத்தைச் சோ்ந்த ராகுல், கலையரசன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்திருந்தனா். இவா்களைத் தவிர மேலும் சிலரை சிபிசிஐடி போலீசாா் தீவிரமாகக் கண்காணித்து வந்தனா் .

இந்த நிலையில் சேலம் மாவட்டம், மேட்டூா் பகுதியைச் சோ்ந்த கலையரசன் (37) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா் இணையதள மையம் வைத்து போலி ஆவணங்களைத் தயாரித்து மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

இதுவரை சேலம் மாவட்டத்தில் பிரதமா் நிதியுதவித் திட்ட மோசடியில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களைத் தவிர மேலும் பலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் ரூ. 6 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதில் ரூ. 1.57 கோடி ரொக்கப் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. தற்போது வங்கிகள் மூலம் மீதமுள்ள ரூ. 4.43 கோடி பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com