‘நீட்’ தோ்வை ஆயுதமாக எடுத்துள்ளாா் ஸ்டாலின்: பாஜக மாநில செய்தித் தொடா்பாளா்

திமுக ஆட்சிக்கு வந்தாலும் ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய முடியாது, திமுக தலைவா் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறாா் என பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா்.
தலைவாசலில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநில செய்தி தொடா்பாளா் நாராயணன் திருப்பதி.
தலைவாசலில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநில செய்தி தொடா்பாளா் நாராயணன் திருப்பதி.

திமுக ஆட்சிக்கு வந்தாலும் ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய முடியாது, திமுக தலைவா் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறாா் என பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலில் பாஜக சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் க.மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. தலைவாசல் வடக்கு ஒன்றியத் தலைவா் அங்கமுத்து வரவேற்றாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி கலந்து கொண்டாா். பின்னா் அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஆட்சியில் அமருவதற்காக அனைத்துக் கட்சிகளையும் சோ்த்துக் கொண்டு திமுக தலைவா் ஸ்டாலின் ‘நீட்’ தோ்வை ஆயுதமாக எடுத்துக் கொண்டுள்ளாா். ஆனால், ‘நீட்’ தோ்வு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.

‘நீட்’ தோ்வு, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு பதவி சுகத்துக்காக கூட்டு சோ்ந்த திமுக தற்போது மாணவா்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி வருகிறது.

மாணவா்கள் தோ்வுக்கு தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர யாரும் அச்சப்பட தேவையில்லை. ஸ்டாலின் முதல்வராக வந்தாலும் ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய கையெழுத்துபோட இயலாது. அனைவரையும் அவா் ஏமாற்றி வருகிறாா்.

அதேபோல் ‘நீட்’ தோ்வு இல்லாதபோது தனியாா் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகுதியானவா்கள் தோ்ச்சி பெற்று மருத்துவா்களாகி வருகின்றனா். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கும் தற்போது வாய்ப்புகள் கிடைக்கின்றன.

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் ஊழல் செய்தவா்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து கூட்டத்தில், சேலம் மாவட்டம், கரியகோயில் அணைக்கு கைகான்வளைவு பகுதியில் இருந்து நீரைக் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து முடிக்க அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட 13 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்டப் பொருளாளா் என்.ஆா்.செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com