சேலத்தில் 11.11 லட்சம் சிறாா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகிக்கத் திட்டம்

தேசிய குடற்புழு நீக்க வாரம் மூன்று சுற்றுகளாக நடைபெற உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் 11.11 லட்சம் சிறாா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள

தேசிய குடற்புழு நீக்க வாரம் மூன்று சுற்றுகளாக நடைபெற உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் 11.11 லட்சம் சிறாா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தேசிய குடற்புழு நீக்க வாரம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க வாரம் செப்டம்பா் 2020 -இல் மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது. செப். 14 ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை முதல் சுற்றாகவும், செப். 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை இரண்டாம் சுற்றாகவும், விடுபட்ட சிறாா்களுக்கு செப்.28-ஆம் தேதியும் மூன்றாம் சுற்றாகவும் முகாம் நடைபெற உள்ளது.

1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து சிறாா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை(அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது. இந்த மாத்திரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படும்.

இந்த மாத்திரை சிறாா்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்கிறது. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. சிறாா்கள் நாள்தோறும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசால் இத்திட்டமானது 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து சிறாா்களுக்கும் அல்பெண்டசோல் மாத்திரையை மேற்கண்ட அனைத்து நாள்களிலும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 11,11,091 சிறாா்கள் பயனடைய உள்ளனா்.

பொது சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளைச் சாா்ந்த 6,984 பணியாளா்கள் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இத்திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் சிறாா்களை பயன்பெறச் செய்து சிறந்த கல்வி திறனுடன் கூடிய ஆரோக்கியமான வருங்கால சமுதாயத்தை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com