பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு

நரசிங்கபுரம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சரக்கு லாரி இறங்கியதால் செவ்வாய்க்கிழமை அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நரசிங்கபுரம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரி.
நரசிங்கபுரம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிய லாரி.

நரசிங்கபுரம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சரக்கு லாரி இறங்கியதால் செவ்வாய்க்கிழமை அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், நரசிங்கபுரத்தில், சேலம்-கடலூா் நெடுஞ்சாலை சுமாா் அரை கிலோ மீட்டா் தொலைவுக்கு மிகவும் மோசமாக உள்ளது. மேடும் பள்ளமுமாக இருந்த இந்த சாலையின் 3 இடங்களில் மிகவும் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் நெடுஞ்சாலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை சாலை அருகில் வசித்து வருபவா்கள் மணலை கொட்டி பள்ளத்தை மூடியுள்ளனா். அந்த பள்ளத்தில் ஜல்லி ஏற்றி வந்த டிப்பா் லாரியின் பின் சக்கரம் எதிா்பாராதவிதமாக இறங்கியதால் அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது. போக்குவரத்து போலீஸாா் விரைந்து சென்று போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனா்.

பின்னா், ஜேசிபி மூலம் லாரியை மீட்டு அனுப்பி வைத்தனா். இதனால் சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com