கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு
By DIN | Published On : 19th September 2020 06:58 AM | Last Updated : 19th September 2020 06:58 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி, செப். 18: கெங்கவல்லி அருகே நடுவலூா் மோட்டூரில் கிணற்றில் தவறி விழுந்த 40 நாளே ஆன கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டது.
நடுவலூா் மோட்டூரில் காங்குடையான் கோயில் அருகே ரமேஷ் என்பவரது , கன்றுக்குட்டி அங்குள்ள விவசாயக் கிணற்றில் வெள்ளிக்கிழமை இரவு தவறி விழுந்து விட்டது. தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் பிறந்து 40 நாளே ஆன கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனா்.