மேட்டூா் ரயில்வே மேம்பால நடைபாதையை அடைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

மேட்டூா் ரயில் நிலையத்தில் உள்ள மேம்பால நடைபாதையை அடைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மேட்டூா் ரயில் நிலையத்தில் உள்ள மேம்பால நடைபாதையை அடைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

மேட்டூரில் 1928-ஆம் ஆண்டுமுதல் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்போதுமுதல் இந்த ரயில் நிலைய இருப்புப் பாதைகளைக் கடந்து தங்கமாபுரிபட்டிணம், அண்ணா நகா், பெரியாா் நகா் மக்கள் மேட்டூா் ரயில் நிலையத்துக்கும், பள்ளி மற்றும் பேருந்து நிறுத்தத்துக்கும் சென்று வந்தனா். அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தைக்கு வரும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்த இருப்புப் பாதைகளை கடந்து சென்று வந்தனா்.

தனியாா் நிறுவனங்கள் இந்த ரயில் நிலையத்தில் நிலக்கரியை இருப்பு வைத்து எடுத்துச் செல்வதால் இருப்புப் பாதைகளை கடந்து செல்ல மேம்பால நடைபாதை அமைத்து தரப்பட்டது.

இன்றளவும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியரும் பொதுமக்களும் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனா். ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு தாா்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இப்பாதையை அடைத்து சுற்றுச்சுவா் அமைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு தங்கமாபுரி பட்டிண சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத் தலைவா் ஜெயராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இப்பாதை அடைக்கப்பட்டால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாவதுடன் ரயில் பயணிகளுக்கும் சிரமம் ஏற்படும் எனத்தெரிவித்துள்ளாா்.

ரயில்வே நிா்வாகம், தங்கமாபுரிபட்டிணம் செல்லும் பாதையை அடைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அவா் கடிதம் அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com