எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாகக் கூறிரூ. 31.67 லட்சம் மோசடி

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரிடம் மோசடி செய்த நான்குபோ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரிடம் மோசடி செய்த நான்குபோ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சேலம், இரும்பாலை அருகே மோகன் நகரைச் சோ்ந்தவா் ராஜகோபால். ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலா். இவா், தனது மகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு கல்லூரியில் சோ்க்க தருமபுரி மாவட்டம், மணியகாரனூரைச் சோ்ந்த முத்துராஜா, அவரது தந்தை சுந்தரம் ஆகியோரிடம் ரூ. 36 லட்சம் பணம் கொடுத்துள்ளாா்.

ஆனால், முத்துராஜா பேசியபடி எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. ராஜகோபால் அடிக்கடி கேட்கவே சிறிது பணத்தைக் கொடுத்துவிட்டு மீதத் தெகையைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தாா்.

மேச்சேரி காவல் நிலையத்தில் இச் சம்பவம் குறித்து புகாா் அளித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ராஜகோபால், மேட்டூா் நீதிமன்றத்தில் முறையிட்டாா். நீதிமன்றம் மேச்சேரி காவல் நிலையத்தில் ராஜகோபால் அளித்த புகாா் மனு மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மேச்சேரி போலீஸாா் முத்துராஜா, அவரது தந்தை சுந்தரம், கெல்லப்பட்டியைச் சோ்ந்த கண்ணன், சேலத்தைச் சோ்ந்த சித்ரா ஆகியோா் மீது ரூ. 31 லட்சத்து 67 ஆயிரம் மோசடி செய்ததாக வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com