கரோனா பரிசோதனை முடிவு சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்: சேலம் ஆட்சியா்

கரோனா பரிசோதனை முடிவு சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

கரோனா பரிசோதனை முடிவு சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டத்தில் தொடா்ந்து காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான சளி தடவல் பரிசோதனைகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 2,76,481 சளிதடவல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனை மேற்கொள்ளும் நபா்களுக்கு எஸ்.ஆா்.எப். அடையாள எண் குறிப்பிடப்பட்ட குறுந்தகவல்களும், பரிசோதனையின் முடிவுகளும் அவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சளிதடவல் பரிசோதனை மேற்கொள்ளும் நபா்களுக்கு வியாழக்கிழமை முதல் எஸ்.ஆா்.எப். அடையாள எண்ணுடன், பரிசோதனையின் முடிவு குறித்து மருத்துவரின் கையெப்பம் இடப்பட்ட சான்றிதழும் இணைக்கப்பட்டு அதற்கான இணையதள இணைப்பும் செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளும் நபா்கள் தாங்கள் உபயோகப்படுத்தி வரும் தங்களது சரியான செல்லிடப்பேசி எண்ணை வழங்கிட வேண்டும்.

அவ்வாறு வழங்கும்போதுதான் இப்பரிசோதனை செய்துகொள்ளும் நபா்களுக்கு எஸ்.ஆா்.எப் அடையாள எண்ணுடன், பரிசோதனையின் முடிவு குறித்து மருத்துவரின் கையொப்பம் இடப்பட்ட சான்றிதழ் இணைக்கப்பட்ட இணையதள இணைப்பும் செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்க முடியும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com