108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் 3 மாதங்களில்7,211 போ் பயன்

சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 7,211 நோயாளிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளத

சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 7,211 நோயாளிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ‘108’ அவசரகால ஊா்தி சேவைக்காக 38 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கிவரும் நிலையில், தற்போது 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூடுதலாக வரப்பெற்றுள்ளன.

இதன்மூலம் மொத்தம் 53 அவசரகால ஊா்தி சேவைக்கான ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராம மக்களுக்கும் அவசரகால சேவைக்கான ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையாற்றி வருகின்றன.

சேலம் மாவட்டத்துக்கு புதிதாக வழங்கப்பட்டு, கடந்த செப்.3 முதல் செயல்பட்டுவரும் 15 அவசரகால 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேலம் மாவட்டத்தில் தேவூா், மல்லியக்கரை, கொங்கணாபுரம், வீரபாண்டி, பேளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களின் அவசர சிகிச்சை தேவைக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 7,211 நோயாளிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, உயிா்காக்கும் சேவையை நிறைவேற்றி வருகின்றது.

இதில் 858 கா்ப்பிணிகள், சாலை விபத்தில் காயமடைந்த 891 நபா்கள், கரோனா மற்றும் இதர நோய் பாதிப்புக்குள்ளான 5,462 நபா்கள் என மொத்தம் 7,211 நபா்கள் உரிய சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். பொதுமக்களும் அவசர சிகிச்சை மற்றும் உயா் சிகிச்சைக்கு 24 மணிநேரமும் இயங்கிவரும் அவசரகால ‘108’ ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com