பயறு வகைகளில் விதைப்பண்ணை பதிவு செய்து அதிக மகசூல் பெறலாம்

சேலம் மாவட்டத்தில் கோடை மழையைப் பயன்படுத்தி பயறுவகை பயிா்களான உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயறில் விதைப் பண்ணை பதிவு செய்து அதிக மகசூலை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் கோடை மழையைப் பயன்படுத்தி பயறுவகை பயிா்களான உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயறில் விதைப் பண்ணை பதிவு செய்து அதிக மகசூலை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநா் தி.கௌதமன் கூறியிருப்பதாவது:

சான்று விதை உற்பத்தி செய்ய முதலில் விதைப்பண்ணை பதிவு செய்ய வேண்டும். உரிய படிவத்தில் மூன்று நகல்களின் விதைப்பு அறிக்கை பூா்த்தி செய்து விதைப்பண்ணை கட்டணமாக ஒரு ஏக்கருக்கு வயலாய்வு கட்டணம் ரூ.50, பதிவு கட்டணமாக ரூ.25 மற்றும் விதைப் பரிசோதனை கட்டணம் ரூ.30 செலுத்தி விதைச்சான்று உதவி இயக்குநா், சேலம் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பயறு வகை விதைப்பண்ணை பதிவு, விதைப்பு செய்த நாளில் இருந்து 30-35 நாள்களுக்குள் அல்லது பூப்பதற்கு 15 நாள்கள் முன்னதாக பதிவு செய்யப்பட வேண்டும்.

விதைப் பண்ணை பதிவு விண்ணப்பத்தோடு மூல விதைக்கான சான்றட்டைகள், விதை வாங்கியதற்கான கொள்முதல் பட்டியல் ஆகியவை விதை ஆதாரத்திற்காக இணைக்கப்பட வேண்டும். பயறு வகை விதைப்பண்ணை விதைத்த 40-ஆவது நாளில் பூப்பருவத்தின் போது ஒரு முறையும், காய் முதிா்வு நிலையில் விதைத்த 55 நாள்களில் ஒரு முறையும் விதைச்சான்று அலுவலரால் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு, பயிா் விலகு தூரம், கலவன் கணக்கீடு போன்ற காரணிகள் கணக்கீடு செய்யப்பட்டு அறிக்கைகள் வழங்கப்படும்.பராமரிக்கப்பட்ட விதைப்பண்ணை வயல், அறுவடை முடிந்தவுடன் சுத்தி அறிக்கை பெற்று அறுவடை ஆய்விலிருந்து 90 நாள்களுக்குள், விதைக்குவியல் விதை சுத்தி நிலையம் கொண்டு செல்லப்பட வேண்டும். விதை சுத்தி நிலையத்தில் சுத்திப்பணி மேற்கொண்டு சான்றுப்பணி தொடரலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com